Home Top Ad

Responsive Ads Here

ஜெய் ஹிந்த்...

Share:
கருப்பு பணத்தை வெளி கொண்டு வர ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டை
ராவோடு ராவா நடுநிசியில் தடை செஞ்சீங்க 
Ok.. 

GST னு சொல்லி நாடு முழுவதும் ஒரே வரி முறையை கொண்டு வந்தீங்க..
Double ok..

ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மேல் இருந்தா இப்போ சமையல் எரிவாயு மானியம் ரத்து னு சொல்றீங்க ...
Triple ok...

சரி மோதி சார், 
இந்த பணத்தை எல்லாம் எங்க கிட்டே இருந்து வசூல் செஞ்சு இது வரைக்கும் எத்தனை அணை கட்டியிருக்கீங்க?
எத்தனை வாய்க்கால் வெட்டியிருக்கீங்க?
எத்தனை குளத்தை தூர் வாரி இருக்கீங்க?

அட அதை விடுங்க ஓடிக்கிட்டு இருக்கிற நதியை எத்தனை சுத்தம் செஞ்சு இருக்கீங்க?

சரி இந்த பணத்தில் வெடிகுண்டாவது வாங்கி இருப்பீங்கனு பார்த்தா அது பூராவும் கொல்லு பட்டாசாவே இருக்கும் போல..

பாமரன் இத்தனை கேள்வியை கேட்டா 
ராசா அண்ணனும், தமிழ் அக்காவும்,
முகநூல் கட்சி போராளிகளும் என்னை Anti Indian நு சொல்லுவாங்க..
சொல்லட்டும்..

ஆத்தா அப்பலோவில் இருந்த போதே 
உணவு பாதுகாப்பு சட்டம்,
நிலகையகபடுத்தும் சட்டம்,
உதயா மின் திட்டம் நு ஏகபோகத்துக்கும் நாங்க தேர்ந்தெடுத்த((!!)முதல்வர்கிட்ட கையெப்பம் வாங்கிட்டீங்க..

அவுங்களும் CBI ரைடு வரும்னு பயந்து போட்டுட்டாங்க..
இன்னும் உங்க கிட்டே நிறையா எதிர்பார்கிறோம் மோதி சார்..

புதிய இந்தியா எப்ப பிறக்கும் னு என் மகன் கேட்டுக்கிட்டே இருக்கான்..
Pls அதையும் கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க சார்..

அடுத்து உதயா மின் திட்டம் அமல்படுத்த போறீங்க..
அதுல விவசாயி இலவச மின்சாரம் போவதும் உறுதியாகிடுச்சு..
சீக்கிரம் அதையும் செஞ்சிடுங்க..

இருக்கிற ஆதார் கார்டு, 
ஓட்டர் ஐடி கார்டு, 
பேன் கார்டு,
விசிட்டிங் கார்டு, 
லைசென்ஸ்,
பாஸ் புக்கு,
எல்லாத்தையும் சரண்டர் பண்டீட்டு 
எங்களுக்கானதை மட்டும் உற்பத்தி செஞ்சுகிட்டு ,
"வந்தே மாதரம் " பாடீட்டு 
புங்க மரத்தடி படுத்து தூங்கிக்கிறோம்..

ஜெய் ஹிந்த்...

No comments