Home Top Ad

Responsive Ads Here

இது யார் தவறு? ◾◾◾◾

Share:
செய்தி- கும்பகோணத்தில் நாளை நடிகர் அஜீத்திற்கு சிலை திறப்பு

இதே கும்பகோணத்திற்கு அருகில் கதிரமங்களத்தில்  72 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள்.

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பாட்டி கூறுகிறார்
 “ குண்டர் சட்டத்திற்கு பயப்பட மாட்டோம். 
குண்டே போட்டாலும் பயப்பட மாட்டோம்.
 5 லட்சம் பேர் செத்தாவது கதிரமங்கலத்தைக் காப்பாற்றுவோம்” என்கிறார்.

கதிரமங்கலத்திற்காக குரல் கொடுத்த மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 

ஆனால் சில தமிழ் இளைஞர்கள் அதே கும்பகோணத்தில் நடிகர் அஜித்திற்கு சிலை திறக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல விரைவில் திருநெல்வேலியிலும் இந்த நடிகருக்கு வெண்கலச் சிலை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

ஒரு நடிகர் அதுவும் மலையாள நடிகருக்கு எதுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கிறார்கள்? 

அதுவும் ஒரு படத்திற்கு 40 கோடி ரூபா சம்பளம் வாங்கிக்கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவருக்கு எதற்கு சிலை?

நல்லவேளை, குஸ்புவுக்கு கோவில் கட்டியதுபோல் இவருக்கு கோவில் கட்டாமல் விட்டார்களே என்று தேவையானால் கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.

மற்றும்படி இவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்று இவருக்கு சிலை அமைக்கிறார்கள்?

நடிகர்  அஜீத்திற்கு சிலை வைப்பது தமிழ் இளைஞர்களின் தவறா? அல்லது

இந்த இளைஞர்களை இவ்வாறு ஊக்குவிக்கும் நடிகர் அஜீத் தவறா? அல்லது

சினிமா மாயையின் கீழ் மக்களை வைத்திருக்கும் தமிழக அரசின் தவறா? அல்லது

தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் இணைக்காத தமிழ் தேசிய தலைவர்கள் தவறா? அல்லது

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தவறா இது?

ஒரு இளைஞர் திருமுருகன் காந்தி தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து சிறையில் வாடுகிறார்.

இன்னொரு இளைஞர்கள் நடிகர் அஜீத்திற்கு சிலை வைக்கிறார்கள்.

நினைக்கவே வெட்கமாய் இருக்கிறது!

No comments