Home Top Ad

Responsive Ads Here

தமிழகத்தின் மழையளவு மற்றும் அதன் நன்மைகள் தீமைகள்

Share:
தமிழகத்தின் வருட மழையளவு 950mm.
nearly 1 meter.தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுர கிலோமீட்டர்.

2,30,00,00,00,000 கன மீட்டர் மழை நாம் பெறுகிறோம்.ஒரு கன மீட்டர் என்பது ஆயிரம் லிட்டர்.

ஒரு TMC என்பது THOUSAND MILLION CUBIC FEET of water.அதாவது சுமார் 8,000 TMC மழையை நாம் பெறுகிறோம்.

ஒரு ஏக்கருக்கு சுமார் 46 லட்சம் லிட்டர் தண்ணீர்  ஒரு வருடத்திற்கு மழை மூலம் கிடைக்கிறது.சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஒரு TMC மழைநீர் கிடைக்கிறது.

அதை மிகச் சரியாகத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்தினால் எந்த அண்டைமாநிலத்திடமும் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், ஏரிகள் ,குளங்கள் போன்று சேமிக்கப்படும் தண்ணீரில் 90% வெயிலில் ஆவியாகிவிடுவதையும்,10% மட்டுமே தரைக்குக் கீழ் ஊடுறுவி நிலத்தடி நீராக மாறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சேமிக்கப்படும் நீரை , அப்படியே மொத்தமாக nearly 100% நிலத்தடி நீராக மாற்றும் BOREWELL RECHARGING TECHNIQUES  மிக எளிதானவை. குறைந்த செலவே பிடிக்கக் கூடியவை. 
       
நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப்போய், AQUEDUCTS அனைத்தும் முழுமையாக EMPTY ஆகி விட்ட இத்தருணத்தில் UNDERGROUND AQUEDUCT RECHARGING THROUGH BOREWELLS என்பது மிகப் பொருத்தமான வழிமுறையாக இருக்கும் .

விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.ஒரு போருக்கு லட்ச ரூபாய் செலவு செய்து பதினைந்து போர் போட்ட விவசாயி, PIT குக் முப்பதாயிரம் செலவு செய்து நான்கு RAIN WATER HARWESTING AND BOREWELL RECHARGING PITS தன் நிலத்தில் அமைத்திருந்தால் ஒவ்வொரு ஏக்கருக்கும் தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிடைக்கும் 46லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீராக மாற்றப்பட்டு இருக்குமே ?

ஏன் செய்யவில்லை? எனது விவசாய உறவினர் தோட்டங்களில், போர்களில் 24 மணி நேரமும் 5HP MOTOR ஓடிக்கொண்டே இருக்கிறது. சிறு குழந்தை ஒன்றுக்குப் போவதைப் போல கொஞ்சம் தண்ணீரைச் சுரண்டி எடுத்து கிணற்றுக்குள் கொட்டுகிறது.
1 HP மோட்டர் ஒரு மணி நேரம் ஓட .746 KWH (unit) மின்சாரம் தேவை.

5×.746×24=90

90×365=32674 .

ஒரு வருடத்திற்கு 32 000 யூனிட் இலவச மின்சாரத்தை செலவழித்து,கமர்ஷிய்ல் கட்டண மதிப்பில் வருடம் 3.2 லட்ச ரூபாயும்,அரசு மின்சாரம் விலைக்கு வாங்குகிற சராசரி மதிப்பிலேயே 1.6 லட்ச ரூபாயும் மதிப்புள்ள மின்சாரத்தை இலவசமாப் பெற்று ,அது அனைத்தையும் நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளுவதிலேயே செலவழிக்கிறார்கள் நம் விவசாயிகள்.

 100% மானியத்தில் மழைநீர் சேகரிப்புக் குளம் அமைத்துக் கொடுக்க அரசுகள் அறிவித்தும் அதை மிகப் பெரும்பாலோர் கண்டுகொள்ளவேயில்லை.
உண்மையாகவே விவசாயிகளுக்கு நன்மை நடக்க வேண்டுமானால், அவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டே தீர வேண்டும்.

மானியமே இல்லாவிட்டாலும் , ஒரு போர் போடுகிற செலவில் நான்கு RAINWATER HARWESTING PITS எடுக்கலாம்.அது நான்கு ஏக்கர் நிலத்துக்குப் போதுமானது.

ஆனால், பிரச்சனை என்னவெனில், ஒருவர் கஷ்டப்பட்டு மழைநீர் சேகரித்தால் உயரப்போவது அவரது நிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் மட்டுமல்ல.அக்கம்பக்கத்து அனைவர் நிலத்தின் நீர்மட்டமும் தான்.

நாம் கஷ்டப்பட்டு செலவு செய்து , பக்கத்துக் காட்டுக்காரன் உட்கார்ந்த இடத்தில் அனுபவிப்பதா என்கிற தயக்கம்தான் நிறையப் பேரைத் தடுக்கிறது.
அக்கம்பக்கத்துக் காட்டுக்காரர்கள் அனைவரிம் அமர்ந்து பேசி ஒருங்கிணைந்து செயல்பட்டால், மிக எளிதாக முடிகிற விஷயம் இது.

அவிழ்த்துப் போட்டுவிட்டு, டெல்லித் தெருவில் ஓடுவதில்லை தீர்வு.உலகத்திலேயே அதிக மழை பொழியும் இடம் இந்தியாவிலுள்ள சிரபுஞ்சி என்பதை பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறோம்.

ஆனால், அந்த சிரபுஞ்சியிலேயே கோடைக்காலத்தில் குடிநீர்ப் பிரச்சனை என்பது எவ்வளவு பெரிய அவமானம்.
பெய்கிற எல்லா மழைநீரையும் வீணடித்துவிட்டு, நம்மைத் தவிர எல்லோரையும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?
[19/04 4:36 pm] Ahilan    ⚔   Ruthran: 'பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்' என்கின்றனர் விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, 'சிப்காட்' தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஒவ்வொருவர் நிலைமையும், இப்படித்தான் இருக்கிறது. சாயம், தோல் கழிவுகளை நீர்நிலைகளிலும், பூமிக்குள்ளும் கலப்பதால், 'தமிழகத்தில் புற்றுநோயின் தலைநகரமாக' ஈரோடு மாறி வருகிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, 'சிப்காட்' அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு, 2,500 ஏக்கர். இங்கு, 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

உயர் நீதிமன்றம் இதுபோன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும், சாய, தோல் கழிவுநீரை சுத்திகரித்து, முற்றிலும் நச்சுத்தன்மையற்றதாக மாற்றிய பின்னரே நிலத்தில் விட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு தொழிற்சாலையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததாக தெரியவில்லை.


அப்படியே அமைத்திருந்தாலும், அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இதில் ஒரு சில தொழிற்சாலைகள், ஒரு படி மேல் போய் சாய, தோல் கழிவுகளை, 'போர்வெல்'கள் அமைத்து பூமிக்குள் நேரடியாக விடுகின்றன.

விளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 15 கி.மீ.,க்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை. சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.

குளத்துக்கு அருகில், 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடுவதாக தொழிற்சாலைகள் தெரிவித்தாலும், உண்மையில் அந்த இடம் மேடான பகுதி என்பதால், கழிவுநீர் அனைத்தும் குளத்துக்கே வந்து விடுகின்றன.சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், போர்வெல் மூலம் பூமிக்குள் விடப்படுவதால் நீர் மாசடைகிறது. இதனால், சிப்காட்டிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலைஉள்ளது.

சாய, தோல் கழிவுநீரால் சிப்காட்டை சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர, வயிறு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.

பெயர் வெளியிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், 'புற்றுநோய் ஏற்பட உணவு பழக்கவழக்கம், புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகிய ஐந்து காரணங்கள் பொதுவானவை. ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது காரணியாக தண்ணீரால், புற்றுநோய் ஏற்படுகிறது. 

'தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல், குளங்கள், ஆறு, போர்வெல்களில் விடப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடுகிறது. மனிதர்கள் குடிக்கும் நீரில், கரைந்திருக்கும் உப்பின் அளவு, டோட்டல் டிசால்வ்டு சால்ட் - டி.டி.எஸ்., 600 வரைஇருக்கலாம்.

'கடந்த, ஆறு ஆண்டுகளில், ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது, 15 ஆயிரம் டி.டி.எஸ்., என்றளவில் உள்ளது. தவிர, கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என, பல வேதிப்பொருட்கள், 30 முதல், 100 மடங்கு அதிகம் உள்ளன. இவை, புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை' என்றார்

No comments