ஏன் தமிழ் புத்தாண்டை சித்திரையில் கொண்டாட வேண்டும் ...?!!!
ஆக இவை
அனைத்தையும் கொண்டு பார்க்கையில் ஆதி தமிழன் அறிவிலும் அறிவியலிலும்
மூத்தவன் . அவனின் ஆய கலைகள் 64 கில் வானசத்திரமும் ஓன்று . அதன்
அடிப்படையிலே ஆண்டுகள் வடிவைக்கப்பட்டது . சூரியனைப்பார்த்து மணி
சொன்னவர்கள் பலர் இருந்து இருக்கிறார்கள் என்பதை பலரும் அறியக்கூடும் .
ஆதலால் தான் தமிழன் இயற்கையையே காலமாக பார்த்து வகைப்படுத்தியவன் சூரியன்
பலம் பொருந்திய சித்திரை முதல் நாளில் இருந்தே தன் காலத்தை பிரித்து
அறிந்தான் என்பது தெளிவாகிறது . இயற்கையின் வழிபாட்டை தொடங்கியவன் என்
முப்பாட்டன் என்பதால் அவன் வழியே என் புத்தாண்டும் சித்திரை முதல் நாளையே
கொண்டாடுவேன்
1
. சித்திரையில் கொண்டாடிக்கொண்டு இருந்த தமிழ் புத்தாண்டு , திடீரென 2008
க்கு பின் அப்போதைய முதல்வர் கலைஞர் அய்யா அவர்களால் மாற்றப்பட்டு தை முதல்
நாளாக்கினார் . மீண்டும் அதை ஜெயலலிதா அம்மையார் 2011 ஆண்டு முதல்வர் பதவி
ஏற்ற பின் மீண்டும் அது மாற்றப்பட்டு சித்திரையில் கொண்டாடப்பட்டது .
இப்படியே ஓவ்வொரு ஆட்சியிலும் இனி மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தால் தமிழ்
புத்தாண்டே இல்லாமல் போகும் நிலைகூட உருவாகலாம் .
"இந்த
சங்க இலக்கிய சான்றுகளில் பல இடங்களில் தையையும் பல இடங்களில்
சித்திரையும் பாடியுள்ளனர் . அதன் பாடல் விளக்கத்தை காணும்போது
எவ்விடத்திலாவது தை முதல் நாள் தமிழ் திங்கள் முதல் நாள் என்று உள்ளதா ?
இல்லை . ஆனால் சங்க இலக்கியங்கள் பல தை மாதத்தை புகழ்ந்து படி இருக்கிறது .
காரணம் தை மாதம் அறுவடை முடிந்து ஆனந்தம் கொள்ளும் மாதம் ஓடாக உழைத்த
மனிதன் ஓய்வு கொள்ளும் மாதம் . பெரும்பாலான கிராமியப்பாடல்கள் வயல்
வெளிகளையும் , களத்து மேட்டுகளிலுமே பிறந்தது . அப்படியே சங்க
இலக்கியத்திலும் தை மாதத்தை போற்றி உள்ளேன . ஆனால் ஒரு இடத்தில் கூட தை
மாதம் தான் தமிழ் மாதத்தின் முதல் மாதம் என குறிப்பிடவில்லை .
2
. தை மாதத்தை போற்றிய பல சங்க இலக்கிய நூல்களிலே அது எந்ததனாவது பாடல்
என்று குறிப்பிட்டு இருக்கும் கலைஞர் அய்யா நித்திரையில் இருக்கும் தமிழா
என தொடங்கும் பாரதிதாசன் பாடல் என்று கூறப்படும் பாடலை மட்டும் ஏன் எந்த
நூல் என்று கூட குறிப்பிட வில்லை . சரி தை மாதத்தை பல இலங்கிய நூல்கள்
படியுள்ளது என்றால் ஏன் எந்த சிறப்பும் இல்லாத சித்திரை முதல் நாளை
சித்திரை திங்கள் முதல் நாள் கொண்டாட்டமாக கொண்டாட வேண்டும் .
3
.நெடுநல்வாடை குறிப்பில் " ஆடு தலையாக தொடங்கும் சூரிய மண்டலம் என
இருப்பதை கவனியுங்கள் . இப்படி சூரிய மண்டலத்தின் தொடக்கம் ஆடு தலையுடைய
மேஷம் என பதிவாகிறது . ஆக நாம் தமிழ் இலக்கியம் கூறும் ஆறு வகை காலங்களும்
சூரியனை அடிப்படையாக கொண்டவையே ,
பருவ காலம் ஆங்கில நாட்காட்டியில் தமிழ் மாதங்கள்
இளவேனில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 சித்திரை, வைகாசி
முதுவேனில் ஜூன் 15 to ஆகஸ்டு 14 ஆனி, ஆடி
கார் - மழை ஆகஸ்டு 15 to அக்டோபர் 14 ஆவணி, புரட்டாசி
கூதிர் - குளிர் அக்டோபர் 15 to டிசம்பர் 14 ஐப்பசி, கார்த்திகை
முன்பனி டிசம்பர் 15 to பிப்ரவரி 14 மார்கழி, தை
பின்பனி பிப்ரவரி 15 to ஏப்ரல் 15 மாசி, பங்குனி
இப்படி கால அளவுகள் சித்திரையில் தொடங்குவதை நம் தமிழ் புத்தத்தில் சிறு வயதிலேயே படித்து இருக்கிறோம் என்பதை தாங்களும் அறிவீர்கள் .
4
.1921 ஆம் ஆண்டு மறைமலையார் மற்றும் பல அறிஞர்கள் கூடி தமிழனுக்கு என தனி
ஆண்டு வேண்டும் என முடிவு செய்தததாக ஒரு செய்தி இருக்கிறது .அப்படி என்றால்
ஏன் 2008 வரை யாரும் அதை வழி மொழியவில்லை . ஆண்டுகள் பல ஆட்சி செய்த
அறிஞர் அண்ணா , MGR அய்யா , அவர்கள் ஏன் 2008 முன்னால் பல முறை ஆட்சி செய்த
கலைஞர் அய்யா கூட அதை ஏன் நடை முறை படுத்த வில்லை . அவர்களின் சன்
தொலைக்காட்சி கூட தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளிலே தொடங்கப்பட்டது
என் பதை தாங்களும் அறியக்கூடும் .
.5
. ரோமானியர்கள் சூரியன் வடக்கு நோக்கி செல்லும் நாளையே புத்தாண்டு
தொடக்கமாக கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு குறிப்பு செய்தி இருக்கிறது . நாம்
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் நம்முடைய வெயில் காலம் அவர்களுக்கு
மழைக்காலம் , அதனால்தான் நமது ஆங்கிலப்புத்தகத்தில் RAIN RAIN GO என்ற
பாடல் சிறுவயதில் இருந்திருக்கும் படித்து இருப்பிர்கள் . இந்த பாடலை நம்
பள்ளிக்குழந்தைகள் ஜூன் மாதத்தில் படிக்கும் . மழை வரும் முன்னே அதை எப்படி
போகச் சொல்லுவது . இந்த கணக்கில் பார்த்தால் கூட நமக்கும் அவர்களுக்கும்
கால வித்தியாசம் 4 மாதம் இருக்கிறது . அப்படி அவர்கள் ஜனவரி யை
கொண்டாடினால் நாம் ஏப்ரல் மதத்தில் தான் கொண்டாட வேண்டும் . உலகமே தன்
காலத்தை சூரியனின் அடிப்படையாக கொண்டது என்றால் , சூரியன் வடக்கு நோக்கி
செல்வதில் சிறப்பு இருக்கா இல்லை உச்சபலம் அடையும் நாளில் இருந்து
தொடங்குவது சிறப்பிருக்கா ...?
6.
மற்றொன்று நம் இப்போது உள்ள நம் தமிழ் வருடங்கள் தமிழ் சொற்கள் அல்ல
ஆரியர்கள் கற்பித்தது என்ற வாதமும் நம்மிடையே உள்ளது . ஆக இது ஆரியர்கள்
கொண்டாடியது என்றும் சிலர் விவாதம் செய்கிறார்கள் . அப்படி ஆரியர்களின்
கொண்டாட்டம் என்றால் இந்த ஆரியர்கள் யார் என்று பின்னோக்கி பார்த்தால்
இவர்கள் ஜெர்மானியர்கள் . அங்கிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்கள் .
அவர்கள் அங்கிருந்து இங்கு வந்து குடியேறி விட்டு ஏன் அங்கு { ஐரோப்பா }
மட்டும் ஜனவரி 1 நை புத்தாண்டாக கொண்டாடிவிட்டு இங்கு வந்து ஏன் சித்திரையை
கொண்டாட வேண்டும் . ஆக ஆதி தமிழன் இயற்க்கை வழிபாட்டையே மேற்கொண்டான் .
அதிலும் சூரியன் பலம் பார்த்தே தன் காலத்தையும் , ஆண்டுகளையும்
வைப்படுத்தினான் என்பது தெளிவாகிறது . ஆனாலும் இந்த தமிழ் ஆண்டுகளில்
சம்ஸ்கிரித வாத்தைகள் இருக்கிறதே என்ற குழப்பம் பலருக்கு வரக்கூடும் .
காரணம் அது மொழிக்கலப்பு , வட சொல் கலப்பு என்பது தொல்காப்பியன் இருந்ததை
பல சான்றுகள் எடுத்து கூறுகிறது . ஆனாலும் அது வட சொல்தான் என்று யாராலும்
100 சதவீதம் தெளிவு படுத்த இயலாது , காரணம் தமிழ் தான் ஆதி மொழி அதில்
இருந்து தோன்றியவைதான் பிற மொழிகள் , தமிழில் இருந்து பல சொற்கள் வேற்று
மொழிக்கு சென்று பின் அவை பேச்சு வழக்கில் திரிந்து பின் தமிழ் மொழில்
கலந்ததிருக்கும் சான்றுகள் பல உள்ளன . ( குறிப்பு : நீதி என்பதே தமிழ் சொல்
இல்லையாம் , நன்னெறி என்பதே தூய தமிழ்சொல் , இப்படி சமஷ்கிரிதம் என்று
கண்டுபிடிக்க முடியா அளவு பல சொற்கள் தமிழில் உள்ளது . அப்படி உள்ள சொற்கள்
கூட தமிழில் இருந்து பிறமொழிகளுக்கு சென்று பின் பேச்சுவழக்கில் திரிந்து
மீண்டும் தமிழுக்கு வந்ததாகத்தான் இருக்கமுடியும் . காரணம் பிற மொழிகள்
தோன்றிய காலம் தெரியும் தமிழ் தோன்றிய காலமே தெரியாது அவ்வளவு பழமை
வாய்ந்தது )
No comments