Home Top Ad

Responsive Ads Here

சர்வதேச அளவில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் பட்டியல்

Share:
இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தொகை. இந்தியாவில் 7,57,77,797

கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) என்ற அறிக்கை கூறுகிறது.

>> உலக மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு கிடைக்கும் நீர்.   4%மட்டுமே. 

இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை கலந்து இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மி.கி, புளோரைடு 1.5 மி.கி., மற்றும் 45 மி.கி. என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

வேறு வழியில்லாத இடங்களில் இத்தகைய தண்ணீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்; சமைக்கிறார்கள். அளவுக்கு அதிகமான வேதிப் பொருட்கள் அத்தண்ணீரில் கலந்திருப்பதால் பல்நோய், குடற்புண், ஈரல் நோய், தோல் நோயென வகைவகையான நோய்களுக்கு மக்கள் இரையாகிறார்கள். ஒரு வட்டாரம் முழுவதும் குறிப்பிட்ட ஒருவகை நோயால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது.

  தமிழ்நாட்டின் 72 சதவீத நிலத்தடி நீர் குடிக்க லாயக்கற்றது என்றும், 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாய எல்லைக்குச் சென்றுவிட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது. (சிறிதும் வெட்கமில்லாமல் செய்யவேண்டியதை செய்யாமல் பொதுபனித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 29,484 நீர்நிலைகளில், தூர்வாராமல், மதகுகளை சரிவர பழுதுபார்க்காமல் , கருவேலமரங்களை வளரவிட்டுவிட்டு ஆய்வுறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளது)

 ஒவ்வொரு தனி மனிதரும் இயற்கையை பற்றிய விழிப்புணர்வு  பெறுவது என்பது கடினமான செயல், எனக்கு என்குரு அந்த புரிதலை வழங்குகிறார். மக்களுக்கு அரசாங்கம்  தான்செயல்கள் மூலமாகசுற்றுச்சூழல் பற்றிய புரிதலை மேம்படுத்த வேண்டும். வெற்று பிரச்சாரங்களால் அல்ல.

அடுத்தது ,குழந்தைகள் இறப்பு......

மோசமான தண்ணீரைக் குடிப்ப தால் மயக்கம் மற்றும் நோய் பாதிப் புக்கு மக்கள் ஆளாகின்றனர். ஆண்டுதோறும் இந்தியாவில் 3.15 லட்சம் குழந்தைகள் டயோரியா (வயிற்றுப்போக்கு) நோய்க்கு ஆளாகின்றனர். 1.4இலட்சம் குழந்தைகள் இதனால் இறக்கின்றனர் என்று யுனிசப் என்ற குழந்தைகள் நல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நோயினால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு கட்டுரை ஒன்று லான்செட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.130 நாடுகளில் 2300 ஆய்வாளர்களை கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

அந்த ஆய்வின் படி .

.சோமாலியாவையே  முந்திவிட்டது  இந்தியா. மோசமான சுகாதார சூழ்நிலைகளால்,
பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதல் 100 நாடுகள் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது. ஆனால் மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடான சோமாலியா 21-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 19-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் தேசிய நதியான கஙகையின்  36% நீர் தான்  இந்திய கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. 
இப்படிபட்ட கங்கை ஆறு தான் உலகிலேயே மிகவும் மாசடைந்த நதிகளில் 2வது இடத்தில் உள்ளது என்று நீர்வள ஆயுவக்குழு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 நாம் மிகவும் சிக்கலான சூழ்நிலையில் உள்ளோம். ஒரு பக்கம்  தேவைக்கு  அதிகமாக ஜனதொகை அதிகரிப்பு,மறுபுறம் காடுகள் அழிந்து 17% ஆகிவிட்டது. இது போக இந்தியாவின்  70% நதிகள் வறன்டு விட்டது.

ஆற்றுநீர் வறன்டதால் நிலத்தடி நீரை நம்பினோம் இப்பொழுது அதுவும் 
அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.

இருக்கும் கொஞ்ச நஞ்ச நீரும் குடிக்க லாயக்கற்றதாக ஆகிவிட்டது. 
  இந்தியாவிற்கு இது சோதனைகாலம் என்பதில் சந்தேகமே இல்லை.

பனக்காரர்களுக்கு இதன் பாதிப்பு மிகவும் குறைவுதான். அதனால்தான் அரசுகள் இதில் கூடுதல் கவனம் ெசலுத்துவதில்லை.

 டாஸ்மாககை குறைப்பார்கள் என்று  எதிர் பார்த்தால் அறிவிலித்தனமாக மக்களின்
அத்தியாவாசிய தேவைக்காக வழங்கப்படும் ரேசன்கார்டுகளை குறைத்தவிட்டார்கள்.

அல்லும்,பகலும் வேர்வைசிந்தி உழைக்கும்
,M,L,A , களுக்கு மாதம்   ஒரு இலட்சம்  ரூபாய் சம்பளம் கம்மிஅல்லவா? பாவம்அவர்கள்,
, இதை இன்னும் கூட்ட என்ன செய்யலாம் என்பதில்  தான் நம் அரசு  கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

வேறுவழியில்லை நாமே முன்னின்று இதனை முடிந்தஅளவு சரிசெய்வோம்.

8000980009 இந்த என் தான்  நம் எதிர்காலம்.ஒரு மிஸ்ஸிடுகால். ப்ளிஸ்

நன்றி. விகடன், தி இந்து அன்னியன்,தினகரன், மற்றும் பிற இனைய தளங்கள்.

No comments