இன்றைய அரசியல் சுழலில் வார்டு கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர்
வரை உள்ள பெரும் பாலானோர் பதவி, வசதி, அளவில்லா பொருளாதார சேமிப்பு, போன்ற
சுக போக வாழ்க்கையை மனதில் கொண்டு ஊழல் பெருச்சாலிகளாக
செய்யல்படுகின்றனர். நாடு நலம் பெற வேண்டுமெனில் நம்மை ஆளும் அதிகாரம்
படைத்த அரசியல்வாதிகள் படித்த, அறிவார்ந்து செயல்பட்டு மக்களின் நலனை
மட்டும் கருத்தில் கொண்டு சாதி, மனம், இனம், மொழி கடந்து செயல்பட வேண்டும்
அப்படிப்பட்ட தலைவர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்பதே, டாக்டர் கலாம்
அவர்களின் விருப்பம் அதனால் தான் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை
அரசியல் வியூகம் கொண்டு A MANIFESTO FOR CHANGE புத்தகத்தை டாக்டர்.
அப்துல் கலாம் மற்றும் அவரது ஆலோசகர் விஞ்ஞானி திரு. பொன்ராஜ் அவர்களுடன்
இணைந்து எழுதியுள்ளார்.
இன்றைய அரசியல் சூழலில் உள்ள அரசியல் தலைவர்கள் யாரேனும் ஒருவரை நமது
மக்களின் பிரச்சினை என்ன? என்பதை புள்ளி விவரங்களுடன் மேடைகளில் சுயமாக
ஆராய்ந்து பேச முடியுமா? அதனை தீர்ப்பதர்க்கான வழிமுறைகள் என்ன என்பதை
தெளிவு படுத்த முடியுமா?
எந்த திட்டமானாலும் தனக்கு எவ்வளவு கமிஷன் என்பதை மட்டுமே
கவனிக்கிறான். மேடைகளில் சத்தமாக கவர்ச்சியான, நகைச்சுவை கலந்து பிறரை குறை
கூறுவதையே வழக்கமாக கொண்டு பேசி சுய விளம்பரம் தேடுகின்றனர். கம்யூனிஸ்ட்
என்றாலே உழைப்பாளர்களுக்கான தளமாக இருந்தது ஆனால் இன்று அதன் தலைவர்கள்
சிலர் ஆடம்பர கார், வீடு, வசதியான பிறரது உழைப்பில் வாழ்க்கை இவர்கள்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசியலை கொண்டு ஆடம்பர வாழ்க்கை தேடுபவன் எப்படி
நல்ல தலைவனாக முடியும், நமது நாட்டின் கணிம வளங்கள் திருடப்பட்டு
இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்வி குறி காரணம் சரியான திட்டமிடாததே நமது
அரசியல் தலைவர்கள் நல்ல திட்டம் எதுவானாலும் எதிர்ப்பு காரணம், கமிஷன்
இல்லை. இந்த அவலநிலை தொடர்ந்தால் நமது நாடு சுடுகாடு தான்.
அரசியல் என்றால் சமூக சேவை ஆனால் இன்று பலர் தங்களது தொழிலே அரசியல் என்று குறிப்பிடுகின்றனர்.
நன்கு படித்த, தொலைநோக்கு பார்வை கொண்ட, அறிவார்ந்து விரைந்து
செயல்படக்கூடிய அரசியல் தலைவர்கள் உருவானால் மட்டுமே நம் நாட்டு மக்கள்
செழிப்படைவார்கள்.
இன்று விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள் விளைச்சல் இல்லை, கடன் சுமை,
தற்கொலை மூலக் காரணம் தண்ணீர் இல்லை. அனைத்து வளங்களையும் கொண்ட நாம்
பிச்சை எடுத்து கொண்டு உள்ளோம். அண்டை மாநிலம் மற்றும் நாடுகளுடன் நதிநீர்
இணைப்பு உருவாக்கி இருந்தால் இன்று நாடு செழிப்புடன் விவசாயம் வளர்ந்து
இருக்கும், விவசாயி அம்மணமாக போராட வேண்டிய அவல நிலை உருவாகி இருக்காது.
இன்று அரசியல்வாதிகளின் போராட்டம் என்றாலே விளம்பரம் செய்திகள் மற்றும்
தொலைக்காட்சியில் புகைப்படம் வர வேண்டும் பேட்டி கொடுக்க வேண்டும். அதோடு
போராட்டம் முடிந்து விடுகிறது, ஊரையும் நாட்டு மக்களையும் ஏமாற்ற
போராட்டம், இதுதான் மக்களை ஏமாற்றும் இன்றைய அரசியல் போராட்டம்.
நம்முன்னோர்கள் வீட்டை கட்டிபார், கல்யாணம் பண்ணிபார் என்று கூறுவார்
பணத்தின் அருமை புரிவதற்காக, ஆனால் இன்ரோ மருத்துவம் பார்ப்பதற்கும்,
படிப்பதற்க்குமே பல குடும்பங்கள் கடனாளி ஆகின்றனர். இன்றைய சூழலில் எத்தனை
குடும்பங்கள் மருத்துவ செலவிற்கும் தரமான கல்விக்காக செலவிட முடியாமல்
கஷ்டப்படுகின்றனர் தெரியுமா? தரமான இலவச கல்வி மற்றும் முதல் தர இலவச
சிகிச்சை இதனை கொடுக்காத அரசு, ஒரு அரசா? ஒரு இளைஞனுக்கு உடல்
ஆரோக்கியத்தையும் தரமான கல்வியையும் கொடுத்து பார். அவன் உலகையே வென்று
காட்டுவான். அதற்காக தான் டாக்டர். கலாம் ஒன்றரை கோடி இளைஞர்களை, மாணவர்களை
சந்தித்தார் மனதில் கொள்கைகளை விதைத்தார். டாக்டர். கலாம் அவர்களின்
அரசியல் எண்ணம் இல்லாதவர்? அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று கூறும் எவன்
ஒருவராயினும் டாக்டர். கலாமின் A MANIFESTO FOR CHANGE புத்தகத்தை படித்து
விட்டு அரசியல் பேசுங்கள்.
No comments