Home Top Ad

Responsive Ads Here

மே பதினேழு இயக்கம் யாரும் நம்பல,

Share:
2015 மார்ச் மாதம் ரேசன் கடைகள் மூடப்படப் போகின்றன என்று *மே 17 இயக்கம்* அறிக்கை வெளியிட்டது,

 யாரும்  நம்பல,

அந்தம்மா அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு அறிக்கையெல்லாம் விட்டுச்சு, 

அதைச் சான்றுகளுடன் மறுத்து...

சக்திக்குட்பட்டு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், புத்தக வெளியீடு, டாக்குமெண்டரி என்று ஓடிக் கொண்டிருந்தோம், 

இடையில 2 வருடம்  ஓடிப்போச்சு,

 அதற்காகப் போராடிய திருமுருகன் காந்தி இப்போது டேனியல் காந்தி ஆக்கப்பட்டார்,

 அதாவது காவிகள் ஒருவருக்கு கிருத்துவப் பேர் வச்சிட்டா அவர் கிருத்துவ வல்லரசு நாடுகளுக்கு...
 குறிப்பாக பணக்கார அமெரிக்க ஐரோப்பிய  நாடுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு  தாய்நாட்டு மக்களைக் காட்டிக் கொடுப்பவர் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்,
 இதுதான் உலக வழக்கம், 

திடீரென்று போராடும் இயக்கங்களைப் பார்த்து...

கிருத்துவ நாடுகளிடம் பணம் வாங்கிக் கொண்ட வெளிநாட்டுக் கைக்கூலிகள், ஆண்டி இந்தியன் என்றெல்லாம் எச் ராசா மாதிரி காவிகள் உரத்த குரலில் கத்துவது எல்லாம் நமக்குள்ள அப்படி ஒரு பொதுப் புரிதல் இருக்கு...
 சொன்னா எடுக்கும்ன்னு நம்பித்தான் மக்களே.

 உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் கூட அதற்குப் பிறகு மனத்தில் எங்கோ ஓர் ஓரமாக அந்த சந்தேகத்தை வைத்துக் கொண்டு இருந்திருப்பீர்கள்தானே, 

ஆனால் இன்றைக்கு ரேசன் கடைகள் மூடப்படப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதல்லவா?

இதற்கு என்ன பொருள்.. ?

 பாஜகவும் காவிகளும் ஆர்.எஸ்.எஸ்-ம் எந்தக் கிருத்துவ வல்லரசு நாடுகளுக்கு எதிரானவர்களாகக் காட்டிக் கொண்டார்களோ அதே வல்லரசு நாட்டு முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுக்கு
நம்மை மொத்தமாக விற்று இருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள். 

யார் இந்துக்கள், தேச பக்தி என்றெல்லாம் பேசினார்களோ அவர்கள்தான் ஒட்டுமொத்த இந்துக்களையும் நாட்டு மக்களையும் விலை பேசி இருக்கிறார்கள்..

No comments