Home Top Ad

Responsive Ads Here

லஞ்சம் & ஊழல் குறித்து சமூக மாற்றத்தின் நிலைப்பாடு :::::::

Share:
ஊழல் என்பது அரசுத்துறையில் மட்டுமல்ல.

உணவகத்தில்  உணவு பரிமாறுவதற்கு "டிப்ஸ்" வாங்குவது.

மேஸ்திரி சக தினக்கூலி கொத்தனாரிடம் "கமிஷன்" என்ற பெயரில் பணம் வாங்குவது.

வணிக வர்த்தகத்தில் அரசு அதிகாரிகளை  அலுவலர்களை வளைக்க கமிஷன் தொகை பரிமாறுவது.

இது போன்று சமுதாயத்தின் பல பகுதிகளில் ஊழல் வியாபித்து மக்களே ஊழல் வாதிகளாக இருக்கிறார்கள். அதனால் தான்  அரசியல் வாதிகள்  ஊழல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் மீண்டும் வாக்களிக்கின்றனர். 

இங்கு  ஊழல் இந்த நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கிறது.

ஊழல் மட்டுமல்ல உலகெங்கிலும் நிலவும் அனைத்து முறைகேடுகளுக்கும் மூலக்காரணங்கள் ஆறு.

1. அதிகாரக்குவிப்பு.

2. சொத்துக்குவிப்பு.

3. பணத்தை அடிப்படையாக கொண்ட தவறான வழங்கல் முறை.

4. போட்டிச்சந்தை அல்லது மத்திய திட்டமிடல்.

5. தனி உடைமை.

6. சுற்றுச்சூழல்

இந்த மூலக்காரணங்களிலிருந்து பிறப்பவை :

1. விருப்பங்கள் எண்ணற்றவை.

2. வாய்ப்புகள் அரிதிற் கிடைப்பவை.

3. வாய்ப்புகள் மாற்றுப் பயன்பாடு உடையவை.

இதனை மாற்றுவதற்கான சமூக மாற்றத்தின் செயல்திட்ட அடிப்படைகள் :

1. நேரடிக் குடியாட்சி.

2. நேரடிப் பொருளியல் குடியாட்சி.

3. சுற்றுச்சூழல் குடியாட்சி.

4. கல்விக் குடியாட்சி.

5. சமயக் குடியாட்சி.

6. குடும்ப குடியாட்சி.

ஆகியனவாகும். விளக்கமாக சமூக மாற்றத்தின் இதழில்.

No comments