இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் வரைபடத்தை பாருங்கள். இதுதான்
இந்தியாவின் மொழியியல் வரைபடம். 19ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. இதில்
தற்போதைய சட்டிஸ்கர்க், ஜார்கண்ட், ஓடிசாவின் வடமேற்கு பகுதிகளை
பாருங்கள். கோண்ட்வானி எனப்படும் ஒரு மொழியை பேசிய இடமாக வரைபடத்தில்
காண்பிக்கப்பட்டுள்ளது. இன்று அப்படி ஒரு மொழியை பற்றி பெரும்பாலான இந்திய
மக்களுக்கு தெரியாது. தற்போது மக்களுக்கு தெரிந்ததெல்லாம் சட்டிஸ்கர்,
ஜார்கண்டில் ஹிந்தி தான் பேசுவார்கள், அதனால் தான் அது அவர்களின் மாநில
அலுவல் மொழி என்பதே. 1930களில் ஹிந்தியே அறியாத இவ்விடங்களில் உள்ள மக்கள்
ஹிந்தி தான் பேசுவார்கள் என்று வெளியுலகுக்கு அறிவித்துவிட்டு,
இவ்விடங்களில் மத்திய அரசு சுதந்திரத்துக்குப் பிறகு ஹிந்தியை திணித்தது.
ஹிந்திதான் உயர்ந்த மொழி, அரசு மொழி என்று அந்த மக்களை நம்பவைத்து
அவர்களின் மொழியை வளராமல் தடுத்து தற்போது அழியும் அளவிற்கு
செய்துவிட்டனர். இதைவிட கொடுமை என்னவென்றால், இந்த கோண்டி (Ghondi)
மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் இதற்கு தொடர்பே
இல்லாத மொழியான ஹிந்தியின் ஒரு பேச்சுவழக்கே (Dialect) இந்த மொழி என்று
மத்திய அரசு உலகிற்கு அறிவித்துவிட்டு இந்த மாநிலங்களை ஹிந்தி மாநிலங்களாக
ஆக்கிவிட்டது. இன்னும் அந்த மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான பழங்குடி
மக்களின் மொழிகள் ஹிந்தியால் அழிவின் விளிம்பிற்குச் சென்றுவிட்டன. ஒரு
மொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் ஹிந்தி கற்றுக் கொள்வது தவறு.
ஹிந்தியை கற்றுக் கொள்வது நம் மொழியை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும்.
ஏற்கனவே நம்மவர்கள் சோறு என்பதை கூட தமிழில் கூற வெட்கப்பட்டு, ஸாதம் என்று
கூறுகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் தமிழும் ஹிந்தியின் ஒரு பேச்சு வழக்கே
(Dialect) என்று மத்திய அரசு கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
No comments