தெற்காசிய
நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் 2100ம் ஆண்டு
வாக்கில் வெப்ப அலையில் சிக்கும். அந்த நாடுகளில் மனிதர்களே வாழ முடியாத
அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
தெற்காசியாவில் மனிதர்கள் வாழக்கூடிய வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ்
அல்லது 95 டிகிரி பாரன்ஹீட் என்று இருக்கிறது.
தெற்காசியாவில்
உலகின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள்.
உலக வெப்பமயம் காரணமாக அதிகரிக்கும் வெப்ப அலை காரணமாக மக்கள் உயிர்வாழ
முடியாத சூழல் உருவாகும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
2100ம் ஆண்டு வாக்கில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்.
இந்த
வெப்ப அதிகரிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்று
பாரீஸ் மாநாடு வற்புறுத்தி இருக்கிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில்
தெற்காசிய பின்தங்கியே இருக்கிறது. இதன் விளைவாக சமீப ஆண்டுகளாக
தெற்காசியாவில் கோடைக்காலத்தில் மிக அதிகமான வெப்பம் நிலவியது.
தவிர,
மழைக்காலத்திலும்கூட வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே
இருக்கிறது. குளிர்சாதன வசதி இல்லாமல் வாழமுடியாத நிலை வெகுவிரைவில்
உருவாகும். போதுமான அளவு வெப்பப் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மக்கள்
உயிரிழப்பார்கள் என்று இந்த ஆய்வுகள் அபாய அறிவிப்பு செய்கின்றன.
2015ம்
ஆண்டு இந்தியாவையும் பாகிஸ்தானையும் தாக்கிய வெப்ப அலையில் 3,500 பேர்
உயிரிழந்ததை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்த சில
பத்தாண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைக் குறிப்பாக
சிந்து, கங்கை பாசனச் சமவெளியை பயங்கர வெப்ப அலை தாக்கும் என்று இந்த
ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
*
இன்று ஒரு தகவல்*
┈┉┅━❀••

••❀━┅┉┈
No comments