- மே 17 இயக்கம் (May 17 Movement) என்பது தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பினை சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி
துவக்கினார். இந்த இயக்கம், தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம்
17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் ஒரு அரசியல், சமூக அமைப்பாகும்.
- ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் நிகழ்வினை மே 17 இயக்கம் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்திவருகிறது.
- முத்துகுமார் நினைவு நாள்.
- செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடச்சொல்லி ஆர்ப்பாட்டம்.
- சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்தக்கோரி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.தலைமைச் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்
கீழ்வரும் கருத்துக்களை முன்வைத்து இவ்வியக்கம் போராடி வருகிறது.
1. தமீழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே.
2. தமீழீழ விடுதலைக்காக ஐ.நா அவையின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பு தமீழீழத்தில் வாழும் தமிழர்களிடத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும்.
3. இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் தண்டிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும். அதில் ஆசிய நாடுகள் எதுவும் இருக்க கூடாது.
அணு உலைக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களையும் இந்த அமைப்பு நடத்தியது
No comments