Home Top Ad

Responsive Ads Here

உலகின் நம்பர் 1 ஊழல்வாதி

Share:
உலக அளவில் மிகப்பெரிய ஊழல் வாதிகள் 10 பேர் பெயரை அமெரிக்கா வெளியிட்டது.

அதில் கடாபி முதல் இடத்திலும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட ராஜா இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். ராஜா பற்றி உங்கள் அனைவருக்குமே தெரியும். கடாபி அப்படி என்ன? ஊழல்  செய்தார். அதுவும் முதல் இடத்தை பிடிக்கும் அளவு. ஒரு சின்ன பார்வை.

கடாபி ஆட்சி பொறுப்பேற்கும் சமயத்தில். லிபியாவில் பெரும்பாலான மக்கள் குடிசையில் இருந்தார்கள். அணைத்து லிபிய மக்களும் சொந்த வீட்டில் குடி பெயர்ந்த பின் தான் நான் சொந்த வீட்டிற்கு செல்வேன் என்று உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி டென்ட் கொட்டகையில் வாழ்ந்தார். [ பெரிய கோடீஸ்வரனாக இருந்தும்]

இவர் ஆட்சிக்கு வரும் முன் லிபியாவில் உள்ள எண்ணெய்  வளங்கள் அனைத்தையும் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கொள்ளை அடித்தது. லிபிய நாட்டு வளங்களை பயன்படுத்த லிபிய மக்களுக்கே உரிமை மறுக்கப்பட்டது.  நமது நாட்டில் விளையும் மஞ்சளுக்கு அமெரிக்க காரன் காப்புரிமை வாங்கவில்லையா. அதை போல். 

 இனி லிபிய நாட்டு வளங்கள்  இந்த மண்ணின் மைந்தர்களுக்கே சொந்தம். எங்களுக்கு போக தான் அந்நியர்களுக்கு என்று அவர் சட்டம் போட்டார். அதனால் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகளால் லிபியாவில் கொள்ளை அடிக்க முடியாமல் போனது. லிபிய வளங்கள் அனைத்தையும் உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி  முழுமையாக பயன் படுத்தி கொண்டதால். உலகின் மிகப்பெரிய ஏழை நாடாக இருந்த லிபியா பணக்கார நாடாகியது. ஒரு கட்டத்தில் கடனே இல்லாத நாடாகியது. இன்று வரை கடனே இல்லாத ஒரே நாடு என்னும் பெருமை அந்த நாட்டையே சேரும். ஆனால் இப்பொழுது நிலைமை தலை கீழ். 

 தனது நாட்டு வளத்தை பிற நாடுகள் சுதந்திரமாக கொள்ளையடிப்பதை இந்த சர்வாதிகாரி தடுத்தார். மிக ஏழ்மையில் இருந்த நாட்டை உலகின் நம்பர் 1 நாடாக இந்த உலகின் நம்பர் 1  ஊழல் வாதி மாற்றினார். 

லிபியாவில் அந்நிய சக்திகள் கொள்ளை அடிப்பதை தடுத்தது.  அந்த நாட்டின் ஏழ்மையை விரட்டியது. இதை மட்டும் கடாபி செய்யவில்லை. இன்னொரு மிகப்பெரிய தவறையும் கடாபி செய்தார். புறம்போக்கு படத்தில் வருவதை போல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவர்கள் நாட்டு ஆயுத, மின்சார கழிவுகளின் குப்பைகளை கொட்ட என்றே சில நாடுகளை குப்பை தொட்டிகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த குப்பை தொட்டி நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. கடாபி அவ்வாறு பிற வல்லரசு நாடுகள். தனது நாட்டில்  குப்பை கொட்டும் அந்த சுதந்திரத்தை கூட இந்த கொடுங்கோல சர்வாதிகாரி, ஊழல்வாதி  தடுத்தார். 

 மேலும்.

திருமணமான புது லிபிய தம்பதியருக்கு  60 ஆயிரம் தினார் மொய் வைக்கும் கொடுமையைஉலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி  அரசு செய்தது. 60 ஆயிரம் தினார் என்பது இந்திய மதிப்பில் 28 லக்ஷத்தி 80 ஆயிரம். இந்த பணத்தை லிபிய அரசு எதற்காக? கொடுத்தது தெரியுமா. அணைத்து மக்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காக. 

ஒரு லிபிய தாய் குழந்தை பெற்றெடுத்தால் இந்திய ரூபாய் மதிப்பில் 30 லக்ஷம். 

உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி. லிபியாவில் மதுவை முழுமையாக ஒழித்து. அதன் மூலம் லிபியாவில் மிகப்பெரிய சாராய சந்தையை பிடித்து வைத்து  இருந்த வெளிநாட்டு  கம்பெனிகளின் வயிற்றில் கடாபி அடித்தார். தனியார் பள்ளிகள், கல்லூரிகளையும்  கடாபி ஒழித்து. அதன் மூலம் தனது சொந்த நாட்டு கல்வி வியாபாரிகளின் வயிற்றிலும் கடாபி அடித்தார். 
உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி. KG முதல் பட்டபடிப்பு வரை  லிபியா முழுவதும் இலவச கல்வியை கொண்டு வந்தார்.கடாபி ஆட்சிக்கு வரும் முன்  எழுத, படிக்க தெரிந்தவர்கள் லிபியாவில் வெறும் 25 சதவீதம். கடாபி படுகொலை செய்யப்பட்ட பொழுது லிபியாவில் படித்தவர்கள் 83 சதவீதம். அதில் பட்டபடிப்பு படித்தவர்கள் மட்டுமே 25 சதவீதம். 

உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி  ஆட்சியில். ஒரு லிபிய குடிக்கு தேவைப்படும். கல்வியோ, மருத்துவமோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால். அரசாங்க  செலவில் இலவசமாக அதை வெளிநாடு சென்று பெற்று கொள்ளலாம். மேலும் லிபியாவில் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் அரசாங்கம் மாதா, மாதம் கொடுத்த ஊக்க தொகை எவ்ளவு தெரியுமா. 2300 டாலர்.  நம்ப  ஊர்  மதிப்பில் 151800 ரூபாய்.

உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி ஆட்சியில். லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு பட்டதாரிக்கு வேலை கிடைக்கவில்லை என்றால். அந்த பட்டதாரிக்கு  வேலை  கிடைக்கும்வரை அரசாங்கம் அந்த பட்டதாரியின் படிப்புக்கு ஏற்ற சம்பளத்தை  இலவசமாக தரும். கடாபி ஆட்சியில். படித்து அதிக  பக்ஷம் 3 மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தவர்கள்  யாரும் இல்லை.

மேலும் லிபியா முழுவதும் மின்சாரம் 100 சதவீதம் இலவசம். அதே சமயம் மின் தட்டுப்பாடே இல்லாத நாடாக. உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி ஆட்சியில் லிபியா இருந்தது.

 லிபியாவில் ஒரு கட்டத்தில் வெளிநாட்டு ஆபத்தான ரசாயன உரங்கள்  உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி அரசால் தடைசெய்யப்பட்டது. 100 சதவீதம் இயற்கை விவசாயத்திற்கு  லிபியாவை கடாபி மாற்றினார். அது மட்டுமல்ல. உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி ஆட்சியில் விவசாயிகளுக்கு விதை முதல் விவசாயம் செய்ய நிலம் வரை அனைத்தும்  இலவசமாக தரப்பட்டது. இங்கோ மோடி மஸ்தான்கள் விவசாயிகளுக்கு பம்ப் செட்டுக்கு இலவச மின்சாரம் தரவே மூக்கால் அழுவார்கள். ஆனால் பாராளுமன்ற கேண்டினில் சப்பாத்தி,இட்லி, தோசை அனைத்தும் அம்மா உணவகத்தை விட ரொம்ப சீப். காரணம் பாராளுமன்றத்தில் தான் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள். 

மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் மிக குறைந்த விலையில் லிபிய மக்கள் மட்டுமல்ல. வெளி நாட்டில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களும் வாங்கி கொள்ளலாம். 40 பெரிய ஸ்லைஸ் பிரட் பாக்கெட் இந்திய மதிப்பிலேயே  7 ரூபாய்க்கு ஒரு பணக்கார நாட்டில் கிடைக்கும் என்றால் அது லிபியா தான். அதனால் தான் அன்று பலர் அமெரிக்காவை விட லிபியா சென்று வேலை பார்க்க விரும்பினர். காரணம். அங்கு செலவு ரொம்ப கம்மி. வரவு மிக.... அதிகம். 

அன்று லிபியா சென்று வேலை பார்த்தவர்களில் என் உறவினரும் ஒருவர். 

 ஆபிரிக்க நாடுகளிலேயே நம்பர் 1 பொருளாதாரம் & GDP உள்ள நாடாக லிபியாவை கடாபி மாற்றினார்.

பாலைவன நாடான லிபியாவை பசுமையான தேசமாக மாற்றும் மாயா ஜாலத்தையும் அவர் செய்தார். 
[Great Man Made River Project]  உலகிலேயே மிகப்பெரிய  நீர் பாசான திட்டத்தை நிறைவேற்றியவர் உலகின் நம்பர் 1 ஊழல்வாதியான  கடாபி.  

இதற்கு முன் தமிழ் நாட்டில் 10 ரூபாய், 20 ரூபாய்க்கு பாக்கெட் சாராயம் விற்றவர்கள் எல்லாம் இன்று பெரிய கோடீஸ்வரர்கள். 

 ஆனால்  தமிழக அரசுடாஸ்மார்க் திறந்து 80 ரூபாய்க்கு சரக்கு விக்கறாங்க.

5 வருடங்களுக்கு முன் 50 ஆயிரம் கோடி கடனில் தமிழகம் இருந்தது. இப்பொழுது 3.50 லக்சம் கோடி.

லிபியாவிலோ பூரண மது விலக்கு, இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச நிலம், திருமணம் ஆனால் 28 லக்சம், குழந்தை பிறந்தால் 30 லக்சம், படிக்கும் மாணவர்களுக்கு மாதம், மாதம் ஒன்றை லக்சம்  இப்டி கடாபி அள்ளி, அள்ளி தனது மக்களுக்கு கொடுத்தார். அது வெறும் மக்கள் பணம் மட்டுமல்ல. உலகின் நம்பர் 1 ஊழல்வாதி கடாபி தனது  சொத்திலும் சரி  பாதியை மக்கள் நல திட்டத்திற்காக அரசாங்க கஜானாவில் சேர்த்தார். அவ்ளவு அள்ளி, அள்ளி கொடுத்தும் லிபியா  உலகின் சூப்பர்  பவர் ஆனது. உலகில் கடனே இல்லாத ஒரே நாடாக லிபியா ஆனது. 

 இது போன்ற ஒரு அதிபரை நாம் உலக சரித்திரத்திலேயே இதுவரை பார்த்ததில்லை. அவ்வாறு இருந்தும். ஒரு கட்டத்தில் லிபிய மக்கள்  கடாபிக்கு எதிராக ஆயுத புரட்சியில் இறங்கினர். அவ்வாறு ஆயுத புரட்சியில் இறங்கியவர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே அமெரிக்கா முதலான நாடுகள் கடாபியின் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். இது தான் சரியான நேரம் என்று நேட்டோ படை மூலம் லிபிய மக்களுக்கு உதவி செய்வதை போல் வெள்ளையர்கள் உள்ளே பூந்தார்கள். 

 ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.  ஒரு நாடே ரெண்டு பட்டால் அது வெள்ளை காரனுக்கு கொண்டாட்டம். அமெரிக்காவில் பல லக்ஷம் சிகப்பிந்தியர்களின் தலை சீவப்பட்டது, ஆஸ்திரேலியாவில் பல லக்ஷம் பழங்குடி இன மக்கள்  படுகொலை. பல கோடி ஆப்ரிக்க மக்கள் படுகொலை என்று நாம் உலக வரலாற்றை எடுத்து பார்த்தோம் என்றால். இந்த பூமியில் ஓடிய ரத்த ஆறில் முக்கால் வாசிக்கு மேல் வெள்ளையரால் ஓடியது. 

சரி. லிபிய மக்கள் எதனால்? கடாபிக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். 

 பலகோடி முட்டாள்கள் சேர்ந்து ஒரு அயோக்கிய அரசியல் வாதியை  தேர்ந்து எடுப்பதற்கு பெயர் தான்  ஜன நாயகம்.  என்பதை கடாபி நன்கு உணர்ந்தார்.

இதுவரை தமிழகத்தை ஆண்டவர்களிலேயே மிகப்பெரிய நீர் மேலாண்மை திட்டங்களை செய்து. ஐயாயிரம் அரசாங்க பள்ளிகளை திறந்து. கல்வி, கல்வி சீருடை, மாணவ, மாணவிகளுக்கு உணவு என அனைத்தையும் இலவசம் ஆக்கிய  காமராஜரையே தோற்கடித்த மக்கள் அல்லவா நமது தமிழக மக்கள். 

குஜராத் இன்று வரை கல்வியில் 16 வது இடத்தில் தான் இருக்கிறது. ஒரு அரசாங்க பள்ளி கூட மோடி குஜராத்தை ஆண்ட அந்த 13 ஆண்டுகளில் கட்டவில்லை.  மோடிஜி ஆட்சியில் குஜராத் சர்வம் தனியார் மையம். நாம் மக்களுக்கு கல்வி அறிவை புகட்டினால். பதிலுக்கு மக்கள் நமக்கு தோல்வியையே பரிசாக தருவார்கள். மக்களை நாம் இறுதிவரை முட்டாளாகவே வைத்து கொண்டிருந்தால் தான் நாம் பிழைப்பு நடத்த முடியும் என்று  மோடிஜீ அவ்வாறு செய்தாரோ என்னவோ.   

ஜனநாயகம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாப கேடு. 

ஒரு பாட்டு போட்டியில் தீர்ப்பை நன்றாக பாட தெரிந்த, சங்கீத ஞானம் உள்ள ஒரு நடுவர் தான் சொல்ல வேண்டும். SMS மூலம் மக்கள் ஒட்டு போட்டு தீர்ப்பு சொல்லும் அவலம் இன்று இருப்பதால் என்ன? நடக்கிறது. தனக்கு வேண்டிய பையன், பெண் பாடினால் நன்றாக பாடவில்லை என்றாலும்  ஒட்டு  போட ஒரு கும்பல்.  ஏழை என்பதற்காகவோ. அழுக்கு சட்டை அணிந்து வருவதாலோ பரிதாபப்பட்டு ஒட்டு 
 போட ஒரு கூட்டம். திறமை, தகுதி இவையெல்லாம் ஏழை, பணக்காரன் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் பரிசு தகுதியானவர்களுக்கு மட்டுமே  கிடைக்க வேண்டும் அல்லவா?

 விஜய் டிவி Airtel Super Singer ரில் ஒரு பெண்ணிற்கு இரண்டாம் பரிசோ, மூன்றாம் பரிசோ கிடைத்து இருக்க வேண்டியது. ஆனால் முதல் பரிசு கிடைத்தது. காரணம் அந்த பெண்ணின் அப்பா. Airtel லில் பெரிய.... அதிகாரி. Sms ஓட்டெடுப்பில் 
 நடந்த தில்லு முல்லு வேலையால் அந்த பெண்ணிற்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற வேண்டிய பெண் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாள். 

லிபியாவில் ஜன நாயகம், ஓட்டெடுப்பு  
இவையெல்லாம் நாம் கொண்டு வந்தால் அது லிபிய  நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாது. வீழ்ச்சி பாதைக்கு தான் கொண்டு செல்லும் என்று அவர் ஜன நாயக  ஓட்டெடுப்பை 
அனுமதிக்கவில்லை. அதே சமயம் தன்னை பற்றி மக்களும், ஊடகங்களும் சுதந்திரமாக விமர்சனம் செய்ய அவர் அனுமதி வழங்கினார். தேர்தல் நாட்டில் வர வேண்டும் என்று லிபிய மக்கள் போராடினார்கள். கடாபி முடியாது, அது நடக்காது என்று திட்டவட்டமாக சொன்னார். தனது குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு அவர் முக்கிய  பொறுப்புகளை வழங்கினார். அதை குடும்ப அரசியல் என்று விமர்சித்து அதற்கு எதிராகவும் போராடினார்கள். 

மேலும் லிபியா இத்தாலியிடமிருந்து சுதந்திரம் பெற்றபின் அதிகார பூர்வ இஸ்லாமிய நாடாக லிபியா ஆனது. கடாபி இஸ்லாமிய நாட்டை செக்யூலியர் தேசமாக மாற்றினார். லிபிய பெண்களுக்கு அதற்கு முன் இருந்த பயங்கர கட்டுபாடுகள் அனைத்தையும் அவர் தளர்த்தினார். அதனால் லிபிய இஸ்லாமிய வெறியர்கள் கொந்தளித்தார்கள். மசூதி அருகேயே சர்ச் வந்தது, கோவில் வந்தது. இந்த நாட்டில் இஸ்லாம் மட்டுமே இருக்க வேண்டும். பிற மதங்களை தடை செய்ய வேண்டும் என்று அதற்காக தான் லிபிய காட்டுமிராண்டிகள்   மிக தீவிரமாக கைகளில் ஆயுதம் ஏந்தி  போராடினார்கள். பிற மதத்தவர்களை படுகொலை செய்யவும் ஆரம்பித்தார்கள். நேற்றுவரை தனக்கு எதிராக வெறும் ஒழிக கோஷம் போட்டு கொண்டிருந்தவர்கள். வன்முறையில் இறங்க ஆரம்பித்ததும். ராணுவ பலம் மூலம்  அவர்களை கடாபி அடக்கினார். 

 ஹரியானாவில் வன்முறையில் ஈடுபட்ட ஜாட் இன மக்களை அரசாங்கம் ராணுவம் மூலம் தானே அடக்கியது. ஜனநாயக நாட்டிலேயே. அப்பாவி பொதுமக்களின் நிம்மதி, அமைதிக்காக. அப்பப்ப. ராணுவ நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு முதலானவைகள் செய்யும் பொழுது. ராணுவ ஆட்சி உள்ள சர்வாதிகார நாட்டில்.

 கடாபி ஆட்சிக்கு வந்ததும். முதலில் அங்கு இருந்த பெரிய அமெரிக்க விமான தளத்தை மூடினார், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசம் இருந்த லிபியாவின் பெற்றோலிய பங்குகளை லிபியாவின் வசம் முழுமையாக கொண்டு வந்தார். மது ஒழிப்பை அவர் கொண்டு வந்ததால். அமெரிக்க, ஐரோப்பியர்களின் சாராய வியாபாரம் அங்கே பறிபோனது. லிபியாவை இயற்க்கை விவசாயத்திற்கு மாற்றியதால். அமெரிக்க, ஐரோப்பியர்களின் உர வியாபாரம் அங்கே பரி போனது. லிபியாவில் அவர்கள் நாட்டு கழிவுகளை கொட்டவும் தடை. இவை அனைத்திற்கும் மேலாக. லிபியாவுடன் நடக்கும் பெற்றோலிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு பதில் தங்கங்களையே பயன் படுத்த வேண்டும் என்று அவர் போட்ட நிபந்தனை. அமெரிக்கர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியது. 

 ஆனால் அப்பொழுது கடாபிக்கு லிபிய மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததால். அந்த மக்கள் செல்வாக்கின் முன்  அவரை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் ஆட்டவும் முடியலை. அசைக்கவும் முடியலை. மத வெறி உச்சந்தலைக்கு ஏறிய லிபிய முட்டாள்கள் கடாபிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட அதை கடாபி இரும்பு கரம் கொண்டு அடக்க ஆரம்பித்தவுடன். அப்பொழுது.  கடாபி என்கிற யானையை குழியில் தள்ளி வீழ்த்த இது தான் சரியான சந்தர்ப்பம் என்று அமெரிக்க, ஐரோப்பிய நேட்டோ படை உள்ளே நுழைந்தது. 

 கடாபிக்கு எதிராக போராடும் மக்களுக்கு  நேட்டோ படை ஆயுத சப்ளை செய்தது. ஒருபுறம் லிபிய மக்கள். இன்னொரு புறம் தனது ராணுவத்திலேயே  ஒரு பகுதி மத வெறி கோஷ்டி கலவர காரர்களோடு சேர்ந்தது. எல்லாம் சேர்ந்து  அது கடாபிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. முடிவில் நடு தெருவில் நாயை சுட்டு கொல்வதை  போல் கடாபி சுட்டு கொல்லப்பட்டார். 

 தனது நாட்டு மக்களை கொடுமை படுத்தி கொலை செய்த சர்வாதிகாரி என்று அமெரிக்க ஊடகங்கள் இவரை தான் சொல்கிறது. இவரை தான் பொம்பளை பொருக்கி என்று அமெரிக்க ஊடகங்கள் சொல்கிறது. தனது சொத்தில் ஒரு பாதியை அரசாங்க கஜானாவில் சேர்த்த இவருக்கு தான் அமெரிக்க ஊடகங்கள் ஊழல் வாதிகளில் நம்பர்  1 இடம் கொடுத்து  இருக்கிறது. 

 உண்மையில் லிபிய மக்கள் அவர்கள் தலையில் மண் அள்ளி போட்டு கொள்ளவில்லை. மலத்தை அள்ளி போட்டு கொண்டார்கள். கடாபி படுகொலை செய்யப்பட்டதால். 

லிபிய மக்களுக்கு வர வேண்டிய 150 பில்லியன் டாலர் பணம். இந்திய மதிப்பில் 10 லக்ஷம் கோடிக்கும் மேல். அது தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல். இன்று லிபிய மக்களுக்கு சேர வேண்டிய பல லக்ஷம் கோடிகளையும்  வெள்ளையர்கள் கொள்ளை அடித்து  கொண்டிருக்கிறார்கள்.

  இந்தியாவில் மக்கள் நிறைய பேர் முட்டாள்களாக தான் இருக்கிறார்களே ஒழிய. லிபியா போல் மத வெறியோடு கிளர்ச்சி செய்யும் மக்கள் இங்கு ரொம்ப.... கம்மி. 

 கடாபி போன்ற ஒரு சர்வாதிகாரி 15 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்டால். நிச்சயம் இந்தியா உலகின் நம்பர் 1 நாடாகும். இந்தியாவின் கடன் 35 லக்ஷம் கோடி.

இந்தியாவிற்கு வந்து சேர வேண்டிய கருப்பு பணம் 88 லக்ஷம் கோடி. 

நமது நாட்டிற்கு வந்து சேர வேண்டிய கருப்பு பணத்தை இந்தியா மீட்டாலே. இந்தியா ஒரு வல்லரசு.

 அதற்கு இப்பொழுது தேவை ஒரு சர்வாதிகார நல்லரசு.

1 comment:

  1. ராசா ஊழலற்றவர் என்று நிருபிக்க பட்டுள்ளது

    கற்பனை பொய் குற்றசாட்டை சொல்லி மக்களை திசை திருப்பி குழப்ப எதிரிகளால் செய்யபட்ட சதி என உறுதி செய்யபட்டுள்ளது

    ReplyDelete