Home Top Ad

Responsive Ads Here

நீட் தேர்வில் விலக்கு கோருவது தமிழகத்திற்கு அவமானமாக இல்லையா ? - நீதிபதி.

Share:
ஆம் அய்யா... அவமானமாகத்தான் இருக்கிறது.

உலகவங்கி கடன் தருகிறது என நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு ஆங்கில மீடியத்தை  உள்ளே நுழையவிட்டு,புற்றீசலாய் வளரவிட்டு, மெட்ரிகுலேஷன், இண்டர்நேஷனல், ஆங்கிலோ இந்தியன், மத்தியரசின் ஹிந்தி பள்ளிகள் என கல்வியை பணம் இருந்தால் ஒன்று இல்லையென்றால் என விற்ற தேசத்தை நினைத்தால் அவமானமாய் இருக்கிறது...

தாய்மொழியை கேவலமாக நினைக்க வைத்து ஒன்று ஆங்கிலம் இல்லை இந்தி எனதாய்மொழிச் சிந்தனையை நசுக்கும் நாசிஸ்டுகளை நினைத்தால் அவமானமாய் இருக்கிறது...

என் பள்ளில் எல்கேஜி இடம் கிடைக்க இரண்டு லட்சம் கட்டவேண்டும் கூடவே அப்பனும் ஆத்தாலும் டிகிரு முடித்திருக்க வேண்டும் எனும் பள்ளிகளை  தரமான கல்வி கொடுக்க நினைக்கிறார்கள் என கடந்து சென்ற விதத்தை நினைத்தால் அவமானமாய் இருக்கிறது...

அரசுப்பள்ளியை நீர்முலமாக்கி மதிய உணவை மட்டுமே கவனித்து , தரத்தை கோட்டை விட்ட நிர்வாகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது...

அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் மாதவிலக்கு பேட் மாத்த வசதியில்லாமல், சுத்தம் செய்ய நீர் இல்லாமல் உதிரப்போக்கு அதிகமான நாளில் விடுமுறை எடுக்கும் அதே நாட்டில் நீச்சல் குளத்தோடு என தனியார் பள்ளி விளம்பரங்கள் பார்த்து அவமானமாக இருக்கிறது...


அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 80 - 90 என மாணவர்களை ஆட்டுகொட்டில் போட்டு அடைத்துவிட்டு அவர்கள் பாடம் நடத்தும் கொடுமையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நீதிகளை நினைத்தால் அவமானமாக இருக்கிறது...

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கல்வியை பனிரெண்டு ஆண்டுகள் கொடுத்துவிட்டு கடைசியில் எல்லாருக்கும் ஒரே தேர்வு என்பது... வெவ்வேறு விளையாட்டின் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து ஒரே விளையாட்டில் தகுதியை நீருப்பிக்க சொல்லும் உங்கள் மேதமையை நினைத்தால் அவமானமாக இருக்கிறது...

இறுதியாக...

பனிரெண்டு ஆண்டுகள் படித்த அறிவை விட... கோச்சிங் கிளாஸ் சென்று... அதில் வரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடத்தி... அதுதான் திறன் என்ற உங்களை போன்றவர்களை நினைத்தால் அவமானமாக இருக்கிறது..

No comments