Home Top Ad

Responsive Ads Here

நம் வீரத்தமிழர்களிடம் சொல்லாதீர்கள்......

Share:
*பாரதியிடம்* சொல்லாதீர்கள் ...
பொந்திலே அவன் வைத்த அக்கினி குஞ்சுகள் பொசுங்கிப் போனதென்று . . . பாவம் அந்த யானையிடம் மீண்டும் மிதி வாங்க ஏங்குவான் . . 

ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய *ஜீவாவிடம்* சொல்லாதீர்கள்... 
நாங்கள் வார்டு  கவுன்சிலரைக் கூட எதிர்க்கத் துணியவில்லை என்று! பாவம் நிமித்திய நெஞ்சை குறுகி மடிவான் . . 

*மனுநீதி சோழனிடம்* சொல்லாதீர்கள்... நாங்கள் நீதியற்று சாகிறோமென்று, பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான் 

*வேலுநாச்சியிடம்* சொல்லாதீர்கள்... 
எங்கள் பெண்கள் சித்திரவதை படுவதை, பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . . 

மாமன்னர் *ஒண்டிவீரனிடம்* சொல்லாதீர்கள்... 
நாங்கள் வெளிநாட்டுக்காரனுக்கு இரவு பகலாக வேலை செய்கிறோமென்று, பாவம் சமரசமில்லாமல் வெள்ளையனை போரிட்டு எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . . 

*ராச ராசனிடம்* சொல்லாதீர்கள....
நாங்கள் அரேபிய மன்னர்களுக்கு அடிமையாக வேலை பார்கிறோமென்று, பாவம் பெரிய கோயில் உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . . 

*கட்ட பொம்மனிடம்* சொல்லாதீர்கள... 
நாங்கள் வெளிநாட்டு கம்பெனிக்கு கப்பம் கட்டுகிறோமென்று, பாவம் மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . . 

*சேதுபதியிடம்* சொல்லாதீர்கள்... 
நாங்கள் கடலில் சுடுபட்டு சாகிறோமென்று, பாவம் நடுக்கடலில் குதித்து சாவான் . . 

*வ.உ.சி யிடம்* சொல்லாதீர்கள்....
நாங்கள் அடிமையாய் வாழ்கிறோமென்று, பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . . 

உங்கள் *பிள்ளைகளிடம்* சொல்லுங்கள்.... நாம் அடிமை வர்க்கமில்லை என்று, பாவம் அவர்கள் சுதந்திரமடையட்டும் . . . 

No comments